புரோ ஆக்கி லீக்: இந்திய அணியின் கேப்டனாக அமித் ரோஹிதாஸ் நீட்டிப்பு!

9 அணிகள் பங்கேற்றுள்ள புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் ஜெர்மனியுடன் மோதுகிறது. 

இந்தியா-ஜெர்மனி அணிகள் இடையிலான முதலாவது லீக் ஆட்டம் வருகிற 14-ந் தேதியும், 2-வது லீக் ஆட்டம் 15-ந் தேதியும் ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடக்கிறது. 

ஜெர்மனிக்கு எதிரான போட்டிக்கான இந்திய ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டனாக அமித் ரோஹிதாஸ் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்பீரித் சிங் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

முந்தைய போட்டியில் ஆடிய அணியில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இந்திய அணி 21 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஜெர்மனி அணி 17 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் இருக்கின்றன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.