சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் சானியா மிர்சா, லூசி ஹ்ரடேக்கா ஜோடி தோல்வி..!!
வோல்வா கார் ஓபன் என்று அழைக்கப்படும் சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் போட்டி தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சார்லஸ்டன் நகரில் நடைபெற்று வந்தது.
இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா, செக் குடியரசின் லூசி ஹ்ரடேக்கா ஜோடி, ஸ்லோவேனியாவின் ஆண்ட்ரேஜா கிளெபாக், போலந்தின் மேக்டா லினெட் ஜோடியுடன் மோதியது.
2 மணி நேரம் 35 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் ஆண்ட்ரேஜா க்ளெபாக், மேக்டா லினெட் ஜோடி 6-2, 4-6, 10-7 என்ற செட் கணக்கில் சானியா மிர்சா, லூசி ஹ்ரடேக்கா ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.