பீஸ்ட் படத்தின் 3-வது பாடல் நாளை வெளியீடு: படக்குழு அறிவிப்பு!!
நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் வரும் 14 ஆம் தேதி வெளிவர இருக்கும் நிலையில், படத்தின் மூன்றாவது பாடலை நாளை வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஏற்கெனவே அரபிக்குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது பீஸ்ட் மோட் என்ற மூன்றாவது பாடலை நாளை வெளியிடுவதாக படக்குழு அறிவித்து உள்ளது. தற்போது இந்த பாடலை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.