நெற்றியில் பொட்டு வைத்து பள்ளிக்கு வந்த காஷ்மீர் மாணவிகளுக்கு அடி!
ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீரில் நெற்றியில் பொட்டு வைத்து பள்ளிக்கு வந்த மாணவிகளை ஆசிரியர் சரமாரியாக தாக்கினார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு -காஷ்மீர் யூனியன் பிரதேசம் ரஜோரி மாவட்டம் ஹடுரீன் பகுதியில் அரசு பள்ளி செயல்படுகிறது. அங்கு படிக்கும் ஹிந்து மதத்தை சேர்ந்த 4-ம் வகுப்பு மாணவிகள் இருவர் ஏப்.4ல், தங்கள் வழக்கப்படி நெற்றியில் பொட்டு வைத்து பள்ளிக்கு சென்றுள்ளனர். அம்மாணவிகளை வகுப்பு ஆசிரியரான நசீர் அகமது கடுமையாக தாக்கி திட்டியுள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.