மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை: முதல்வர் ஸ்டாலின்!

சென்னை; மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கடந்த தி.மு.க., ஆட்சியில் நியமிக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள், பிந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து அவர்கள் போராட்டம் நடத்தி வந்தவர்கள், உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.