பொருளாதார பாதிப்பிலிருந்து காப்பாற்றிய அரசு திட்டங்கள்!!

புதுடில்லி: உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டம், ‘கதி சக்தி’ திட்டம் ஆகியவை, உலக பொருளாதார பாதிப்புகளிலிருந்து காத்து, நாட்டின் வளர்ச்சிக்கு உதவியுள்ளதாக, மத்திய நிதியமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சகத்தின் மாதாந்திர பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உலக பொருளாதார நிலை, இந்தியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், அரசின் கதி சக்தி, உற்பத்தியுடன் இணைந்த ஊக்க தொகை திட்டம் ஆகியவை காத்துள்ளன. மேலும் வளர்ச்சியை அதிகரித்துள்ளன. உணவு, உரம் மற்றும் கச்சா எண்ணெய் விலைகள் மீதான புவிசார் அரசியல் தாக்கம், உலக அளவிலான வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவும் அதன் தாக்கத்தை உணரலாம்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.