ஆங்கிலத்திற்கு மாற்றாக ஹிந்தியை ஏற்க வேண்டும்: அமித்ஷா!
புதுடில்லி: ஹிந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்லாமல், ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோரியுள்ளார்.
டில்லியில் 37வது பார்லி அலுவல் மொழி குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை விகித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: அரசை நடத்துவதற்கான அலுவல் மொழியாக ஹிந்தியை பயன்படுத்த பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இது நிச்சயமாக ஹிந்தியின் முக்கியத்துவத்தை அதிகரிக்கும். மத்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் ஹிந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது. 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஹிந்தி மொழியின் தொடக்க அறிவை கொடுக்க வேண்டியது அவசியம்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பி. சுரேஷ் வாணியம்பாடி.