முல்லை பெரியாறு வழக்கு விசாரணை!

புதுடில்லி: முல்லை பெரியாறு அணை குறித்த வழக்கில், தொடர்பில்லாத வாதங்களை முன்வைத்த கேரள வழக்கறிஞர் நீதிமன்ற அறையில் இருந்து வெளியேற உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முல்லை அணையை பலப்படுத்தவும், பராமரிப்பு பணிகளுக்கு மரங்களை வெட்டவும் அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. முல்லை பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டப்படும் என கேரள அரசு சட்டசபையில் தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு முரணானது எனவும், நீதிமன்றத்தின் உத்தரவை அவமதிப்பது எனவும் தமிழக அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது, முல்லை பெரியாறு அணை மேற்பார்வை குழு எங்களுக்கான வேலைகளை அணையில் செய்ய அனுமதித்துள்ளது. ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவு கிடைப்பது இல்லை. மேற்பார்வை குழு பரிந்துரைகளையும் பின்பற்றுவது கிடையாது. கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அணை பாதுகாப்பு குறித்து கேரளா பிரச்னை செய்கிறது என தமிழகம் குற்றஞ்சாட்டியது.

இதற்கு நீதிபதிகள், முல்லை பெரியாறில் புதிய அணை அமைப்பது குறித்து யாரும் இப்போது பேச வேண்டாம். தற்போது இருக்க கூடிய அணையின் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து மட்டும் கவனம் செலுத்துவோம் என தெரிவித்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.