கர்நாடகாவில் பிரச்னைகளால் திசைதிருப்பும் பா.ஜ.,: காங்., தலைவர் சிவகுமார் குற்றச்சாட்டு!!

பெங்களூரு: கர்நாடகாவில் அனைத்து உள்ளாட்சி தேர்தல்களிலும் காங்., அதிக இடங்களில் வென்று இருப்பதால் அதனை திசைத்திருப்பவே மாநிலத்தில் பா.ஜ.,வினர் பிரச்னைகளை துவக்குவதாக மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்னைகள் ஓய்ந்ததும், சில நாட்களுக்கு முன்பு ஹலால் என்று விற்பனை செய்யப்படும் முஸ்லிம்கள் கடை இறைச்சியை புறக்கணிக்க வேண்டும் என்று சில அமைப்புகள் பிரச்னையை கிளப்பின. அதன்பிறகு மசூதிகளில் ஒலி பெருக்கிகளை வைக்கக் கூடாது என்று சில அமைப்புகள் பேசத் துவங்கியுள்ளன. இப்படி அடுத்தடுத்த பிரச்னைகளால் கர்நாடகாவில் பரபரப்பு தொடர்ந்து வருகிறது. 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.