நரைத்த தாடியுடன் வைரலாகும் புகைப்படம்…
ஒரு காலத்தில் இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்த அப்பாஸ் அதன் பிறகு பாத்ரூம் கழுவும் மருந்து விளம்பரத்தில் நடித்த போதே அவருடைய மார்க்கெட்டை எப்படி இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்தது.
இந்நிலையில் சமீபத்தில் அப்பாஸ் நரைத்த தாடியுடன் ஹார்லி டேவிட்சன் பைக்குடன் புகைப்படம் எடுத்து தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பெரும்பாலும் நரை தாடி தெரியக்கூடாது என்பதற்காக எப்போதுமே மொழுக்கென்று இருக்கும் அப்பாஸ் சமீபகாலமாக தாடி வளர்த்து வருவது, ஏதாவது ஒரு படத்திற்காக இருக்குமோ? என ரசிகர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்
அப்துல் ரஹ்மான்
தமிழ்மலர் மின்னிதழ்