கோடீஸ்வரர் திருக்கோயில்…

ஜென்மம் ஜென்மமாய் செய்த பாவங்கள் அனைத்தையும் தீர்க்கும் ஒரே தலம் கோடீஸ்வரர் திருக்கோயில்…

1008 ஈஸ்வரர்களால் சூழப்பட்ட தலம். சனி பகவானும் எமனும் எதிரெதிர் சன்னதியில் அருள்கின்றனர். அதே போல் சித்திரகுப்தனும், துர்வாச முனிவரும் எதிரெதிர் சன்னதியில் உள்ளனர்.
இங்குள்ள சனிபகவான் “பாலசனி’ என அழைக்கப்படுகிறார். இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது. காக வாகனத்திற்கு பதில் கருட வாகனம் உள்ளது.
மங்கு, பொங்கு, ஸ்மரணச் சனி மூன்றிற்கும் வழிபடக்கூடிய சனிபகவான் இவர். இவ்வூரை ஒட்டி காவேரி நதி, “உத்திரவாஹினி’ யாக அதாவது தெற்கிலிருந்து வடக்காக பாய்கிறது.
இங்குள்ள உத்திரவாஹினியில் கார்த்திகை ஞாயிறு அன்று விடியற்காலையில் நீராடினால் எல்லாப் பாவங்களும் தொலையும் என்பது பூர்வ நம்பிக்கை.

பூபதி
உதவி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்