மாநகராட்சிக்கு சொத்து வரி பாக்கி ரூ. 760 கோடி!!
சென்னை மாநகராட்சியில் 2021 – 22ம் நிதியாண்டில், 4.80 லட்சம் பேர் சொத்துவரி செலுத்தாமல் உள்ளனர். அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்களின் செல்வாக்கு காரணமாக, நிலுவையில் உள்ள, 760 கோடி ரூபாய்க்கான சொத்து வரி வசூலிப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் வசிக்கும் 1.15 கோடி மக்களின் அடிப்படை தேவைகைளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.மேலும், நகரமயமாக்கலுக்கான அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளுக்காக, ரிசர்வ் வங்கி, உலக வங்கி, ஜெர்மன் வங்கி உள்ளிட்டவைகளிடம் 2,000 கோடி ரூபாய்க்கு மேல் மாநகராட்சி கடன் வாங்கி உள்ளது.
இந்த கடனுக்கான வட்டியாக, ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. மாநகராட்சிக்கு, பல்வேறு வகைகளில் கிடைக்கும் வருவாயிலிருந்து இந்த வட்டித் தொகை செலுத்தப்பட்டு, வளர்ச்சித் திட்டப் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.