முதல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மலர்

வீரபாண்டிய கட்டபொம்மன்
262-வது பிறந்த தினம் !

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சுதந்திரப் போராட்ட வீரர் கட்டபொம்மனின் 262-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கோவில்பட்டி கே.ஆர் விருந்தின் மாளிகையில் கட்டபொம்மனின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது, தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் மோகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

S. செந்தில்நாதன்
இணை ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.