சனிக்கிழமையும் கல்லூரி: அண்ணா பல்கலை முடிவு!!

சென்னை : அண்ணா பல்கலை மாணவர்களுக்கு, அடுத்த மூன்று மாதங்களுக்கு அனைத்து சனிக்கிழமைகளும் வேலை நாள் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலையின் நேரடி இன்ஜினியரிங் கல்லுாரிகளில், செமஸ்டர் தேர்வுகள் முடிந்து, மீண்டும் வகுப்புகள் துவங்கியுள்ளன. இந்த வகுப்புகள், ஜூன் 30 வரை நடத்தப்படும். அதுவரை, அனைத்து சனிக்கிழமைகளும் வேலை நாளாகும். மாணவர்கள் வருகைப்பதிவு குறையாமல், வகுப்புகளில் பங்கேற்க வேண்டும். அடுத்த செமஸ்டர் தேர்வு, ஜூலை 6ல் துவங்கும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.