பருத்தி நூல் விலை உயர்வு!!!

திருப்பூர்: பருத்தி பஞ்சு விலை அபரிவிதமாக உயர்ந்து வருகிறது. தற்போது ஒரு கேண்டி விலை (356 கிலோ) ரூ.93,500 ஆக அதிகரித்துள்ளது. அதனால், தமிழக நூற்பாலைகள், பஞ்சு விலை உயர்வு காரணமாக நூல் விலையை உயர்த்தி வருகின்றனர். அந்த வகைியல் திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்கு பயன்படுத்தபடும் அனைத்து ரக ஒசைரி நூல் விலை கிலோவுக்கு ரூ.30 உயர்த்தப்பட்டுள்ளது. நூல் விலை உயர்வு திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையினரை பாதிப்படைய செய்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.