கோவை – ஈரோடு பாசஞ்சர் ரயில் கட்டணம் இரு மடங்கு உயர்வு!!
திருப்பூர்: ஈரோடு – கோவை ரயில் பயண கட்டணம் இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஈரோடு – கோவை இடையேயான பயணிகள் ரயில் இயக்கம் இன்று துவங்குகிறது. இன்று காலை, 7:15க்கு ஈரோட்டில் புறப்படும் ரயில், திருப்பூருக்கு, 8:10 மணிக்கு வரும்; 9:45 மணிக்கு கோவையை அடையும்.
கொரோனா முன் வரை இந்த ரயில் ‘பாசஞ்சர்’ (டெமு) என பெயரிட்டு இயக்கப்பட்டது.தற்போது, ரயில் எண் மாற்றப்படவில்லை. ஆனால், ‘எக்ஸ்பிரஸ் ஸ்பெஷல்’ என பெயரிடப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச கட்டணம், 15 முதல், 20 ரூபாயாக இருந்தது; தற்போது 10 ரூபாய் உயர்த்தி, 30 ரூபாயாக உள்ளது. திருப்பூரில் இருந்து கோவை மற்றும் ஈரோட்டுக்கு, 35 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்ல பயணி ஒருவருக்கு, 30 ரூபாய் கட்டணம்.வஞ்சிபாளையம் சென்றாலும், 30 ரூபாய். கோவை ஸ்டேஷனில் இருந்து வடகோவை சென்றாலும் 30 ரூபாய் தான்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.