குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து கொள்ளை!!

நாகப்பட்டினம்-நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த முகமூடி கொள்ளையர், பச்சிளம் குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம், காரியாப்பட்டினம், வடமலை மணக்காட்டைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 80; விவசாயி. இவரது மனைவி திலகவதி, 68. இவர்களது மகள் மதுபாலாவுக்கு, 45 நாட்களுக்கு முன் குழந்தை பிறந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில், பன்னீர்செல்வம் வீட்டின் கதவை உடைத்து புகுந்த முகமூடி அணிந்த நான்கு பேர், தொட்டிலில் துாங்கிக் கொண்டிருந்த குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர். பீரோவில் இருந்த நகைகள், பணத்தை தருமாறு மிரட்டினர். இதையடுத்து, 35 சவரன் நகை, 3 லட்சம் ரூபாயை மூகமூடி கொள்ளையர்களிடம் கொடுத்த பின், அக்கும்பல் தப்பியது. கரியாப்பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.