அமெரிக்காவில் ஏப்ரல்-14 தேசிய சீக்கியர் தினம் – நாடாளுமன்றத்தில் தீர்மானம்!!!
அமெரிக்காவில் கடந்த 100 ஆண்டுகளாகவே சீக்கிய மக்கள் குடியேறி வருகின்றனர். இந்நிலையில், அந்த இன மக்களுக்கு ஒரு அங்கீகாரம் அளிக்க முடிவு எடுத்துள்ளனர். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ந் தேதியன்று தேசிய சீக்கியர் தினம் கொண்டாட உள்ளனர். இதற்கான தீர்மானம் அந்த நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் தாக்கலாகி உள்ளது.
மேரி.கே.ஸ்கான்லான் கொண்டு வந்துள்ள இந்த தீர்மானத்தை சக எம்.பி.க்களான கேரன் பாஸ், பால் டோங்கோ, பிரையன் பிட்ஸ்பேட்ரிக், டேனியல் மியூசர், எரிக் ஸ்வால்வெல், ராஜா கிருஷ்ணமூர்த்தி, டொனால்டு நார்கிராஸ், ஆன்டி கிம், ஜான் காரமென்டி, ரிச்சர்டு நீல், பிரெண்டன பாய்லே, டேவிட் வலடாவ் ஆகியோர் ஆதரித்து உள்ளனர். இதை சீக்கிய சமூகத்தினர் வரவேற்றுள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.