அப்பாவி மருத்துவர்களை துன்புறுத்தாதீர்கள்: உருக்கமான கடிதத்துடன் மருத்துவர் தற்கொலை!

ஜெய்பூர்: ராஜஸ்தானில் பிரசவத்தின் போது பெண் இறந்ததற்காக பிரசவம் பார்த்த மருத்துவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டது. இதனால் மன வேதனையடைந்த அவர் ‘அப்பாவி மருத்துவர்களை துன்புறுத்தாதீர்கள்’ என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.