பழங்களில் இருந்து மது தயாரிக்க கேரள அரசு அனுமதி!!
திருவனந்தபுரம் : பழங்களில் இருந்து மது தயாரிக்க அனுமதி தர கேரள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில், மதுவின் தேவை அதிகரித்து வருகிறது. எனவே, பழ வகைகளில் இருந்து மது தயாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், முந்திரி, பலா, அன்னாசி, வாழைப் பழங்களில் இருந்து, குறைந்த போதை தரும் மது தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.