வைட்டமின் A & D சத்துக்கள் கொண்டது.
ஆவின் வெண்ணை மஞ்சள் நிறத்திலும், அமுல் வெண்ணை வெள்ளை நிறத்திலும் இருப்பதன் காரணம் என்ன ?ஆவின், அமுல் என்ன.. மில்கி மிஸ்ட்டையும் லிஸ்ட்ல சேர்த்துப்போமே.மஞ்சள் & வெள்ளை வெண்ணையை பாகுபடுத்தி காட்டுவது அதனுடைய ஊட்டச்சத்து மதிப்பு தான். அதன் அடிப்படையில் அமைந்தவை தான் இந்த நிறங்கள் .முதலில் மஞ்சள் நிற வெண்ணையை பற்றி பார்த்து விடுவோம்!மஞ்சள் நிற வெண்ணையில் உப்பு சேர்க்கப்படுகிறது. வெண்ணை பாக்கெட்டில் சால்ட்டட் பட்டர் (salted butter) என்று போட்டுருக்குமே அதான்!
சொல்லப்போனால், வணிகமயமாக்கபட்ட வெண்ணை என்று சொல்லலாம். உப்பு சேர்ப்பதால் வெண்ணையுடைய shelf life – அதாவது வெண்ணையின் ஆயுட்காலம் நீட்டித்து வைக்கும். நமக்கு தான் தெரியுமே உப்பு நம் பண்டத்தை கெடாமல் காக்கும் தன்மை கொண்டது என்று !! அதிக உப்புதன்மையை கொண்ட மஞ்சள் வெண்ணையை சேர்த்துக்கொள்ளும் பொழுது சோடியம் நம் உடம்பில் தங்கிவிட வாய்ப்பிருக்கிறது. வேறு என்ன, கூடவே அப்பறம் ஹை கொலஸ்ட்ரால் ஆகிவிடுமே!
மேலும், இவை நிறைவுற்ற கொழுப்பு ( சாச்சுரேட்டட் கொழுப்பு) வகையில் அடங்கும். நமக்கு கிடைக்க வேண்டிய நல்ல கொழுப்புகள் இதில் 10% தான் உள்ளன. அதனால், இவ்வகை நிறைவுற்ற கொழுப்பு நிறைந்த வெண்ணையை தவிர்ப்பது நல்லது.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக மஞ்சள் வெண்ணையை தவிர்க்கவும்; தாறுமாறாக உடல் எடையை ஏற்றிவிடும் இந்த வகை வெண்ணை.
இப்போ வெள்ளை நிற வெண்ணை பற்றி தெரிஞ்சுப்போமா! அதாவது, மஞ்சள் நிறத்துக்கு அப்படியே நேர் எதிர் தான் நம்ம வெள்ளை வெண்ணை. இவங்க பேரு அன்-சால்ட்டட் பட்டர்!
இதில் உப்பு சேர்ப்பதில்லை. கூடவே, இயற்கையாக வைட்டமின் A & D சத்துக்கள் கொண்டது.
கெட்ட கொழுப்புகள் அறவே அற்றது. இதனால் நம் உடம்பிற்கு கிடைக்க வேண்டிய நல்ல கொழுப்புகள் வெள்ளை வெண்ணையில் இருக்கும் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் A & D வாயிலாக கிடைக்கப்பெற்று நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது.
இவ்வகை வெண்ணையினால் உடல் எடை கூடாது; மேலும், நம் உடலின் வளர்சிதை மாற்ற விகிதமாக மெட்டபாலிசம் (Metabolism) உயர்கிறது.
நல்ல தெம்பான உடம்பிற்கான அனைத்து வேலைகளையும் இந்த வெள்ளை வெண்ணை உட்கொள்வதால் ஏற்படுகிறது.
செய்தி, வே. இராஜவர்மன் டில்லி தலைமை செய்தி ஆசிரியர்