பெரும்பான்மையை இழந்ததால் பாக்., பிரதமர் ராஜினாமா?!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கட்சியுடனான கூட்டணியில் இருந்து எம்.க்யூ.எம்., கட்சி ஆதரவை விலக்கிக் கொண்டது.

இதையடுத்து பெரும்பான்மையை இழந்துள்ள இம்ரான் கான், பிரதமர் பதவியை எந்த நேரத்திலும் ராஜினாமா செய்யலாம் என்ற நிலை உருவாகி உள்ளது.நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ — இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், அந்நாட்டு பார்லி.,யில் கடந்த 28-ல் தாக்கல் செய்யப்பட்டது.

இதன் மீதான ஓட்டெடுப்பு ஏப்., 3-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மொத்தமுள்ள 342 எம்.பி.,க்களில், 172 பேர் ஆதரவு இருந்தாலே இம்ரானுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறிவிடும். இதைத் தொடர்ந்து, இம்ரான் கான் பதவியில் இருந்து விலக நேரிடும்.ஏற்கனவே இம்ரான் கானுக்கு எதிராக கூட்டணி கட்சிகள் மற்றும் சொந்தக் கட்சி எம்.பி.,க்கள் போர்க் கொடி துாக்கியுள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.