27 சுங்கச்சாவடிகளில் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் உயர்வு!!!

சென்ன-தமிழகத்தில் உள்ள 27 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.தமிழகத்தில், 6,000 கி.மீ.,க்கு மேல் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்கள் இணைக்கப் பட்டுள்ளன. இச்சாலைகள் வழியாக செல்லும் வாகனங்களிடம், சாலை பயன்பாட்டிற்கான கட்டணம் வசூலிப்பதற்காக, 49 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.இவற்றில் 27 சுங்கச் சாவடிகளில், இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. கட்டண உயர்வு பட்டியலில், திண்டிவனம் – ஆத்துார், போகலுார், பூதக்குடி, சென்னசமுத்திரம், சிட்டம்பட்டி, எட்டூர் வட்டம், கணியூர், கப்பலுார், கீழ்குப்பம், கிருஷ்ணகிரி, லெம்பாலக்குடி, லெட்சுமணப்பட்டி,மாத்துார், நல்லுார், நாங்குனேரி, ஸ்ரீபெரும்புதுார், பள்ளிக்கொண்டா, பரனுார், பட்டரை பெரும்புதுார், புதுக்கோட்டை – வாகைகுளம், எஸ்.வி.புரம், சாலைபுதுார், செண்பகம்பேட்டை, சூரப்பட்டு, திருப்பாச்சேத்தி, வானகரம், வாணியம்பாடி ஆகிய சுங்கச்சாவடிகள் இடம் பெற்றுள்ளன.இந்த சுங்கச்சாவடிகளில், 5 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கட்டணம் அதிகரிக்க உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.