சென்னை–ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட, ஆறுமுக சாமி ஆணையத்தின் விசாரணை, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

அப்பல்லோ டாக்டர்கள் ஏற்கனவே அளித்த சாட்சியங்களை, எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவுக்கு விளக்குவதற்காக, ஏப்ரல் 5, 6, 7 தேதிகளில், மீண்டும் அப்பல்லோ டாக்டர்கள் ஆணையத்தில் ஆஜராக உள்ளனர். இதை, அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர் மஹிமூனா பாஷா தெரிவித்தார்.

இதுவரை, 12 முறை கால நீட்டிப்பு செய்யப்பட்ட, ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக் காலம், வரும் ஜூன் 24-ம் தேதி முடிகிறது. ஏப்ரல் 7-ம் தேதியோடு ஆணையத்தின் விசாரணை முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இனியொரு முறை கால நீட்டிப்பு இல்லாமல், ஜூன் 24-ம் தேதிக்குள் ஆணையம், தன் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும் என கூறப்படுகிறது.புதிய செயலர்ஆறுமுகசாமி ஆணைய செயலராக இருந்த சிவசங்கரன், மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். புதிய செயலராக சஷ்டி சுபன்பாபுவை நியமனம் செய்து, அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.

About The Author