ராஜகண்ணப்பனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க போராட்டம்!

ராமநாதபுரம் : அமைச்சர் ராஜகண்ணப்பனை இலாகா மாற்றினால் போதாது. அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும், என தேவேந்திர குல வேளாளர் சங்கத்தினர், ஆதிதமிழர் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் தொகுதியில் வெற்றி பெற்ற ராஜ கண்ணப்பன் போக்குவரத்து துறை அமைச்சரானார். அமைச்சரான பின் சிலமுறை மட்டுமே தொகுதிக்கு மட்டுமே வந்து சென்றார். மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு வருவதில்லை.முதல்வர் ஸ்டாலின் எச்சரித்த பின் மாவட்டத்தின் பிற பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

இந்நிலையில் பி.டி.ஓ., ராஜேந்திரனை சிவகங்கையில் உள்ள வீட்டிற்கு வரவழைத்து ஜாதியை குறிப்பிட்டு ஒருமையில் தரக்குறைவாக பேசியுள்ளார். அமைச்சர் ராஜ கண்ணப்பனை பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும். தவறினால் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடிக்கும், என தேவேந்திர குல வேளாளர் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.