ரூ.19.31 கோடி பற்றாக்குறை பட்ஜெட்: கோவை மாநகராட்சியில் தாக்கல்

கோவை: கோவை மாநகராட்சியில், 19.31 கோடி ரூபாய்க்கு பற்றாக்குறை பட்ஜெட்டை, மேயர் கல்பனா நேற்று தாக்கல் செய்தார்.

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேயர் கல்பனா, நேற்று பட்ஜெட் தாக்கல் செய்து, வரவு – செலவு விபரங்களை அறிவித்தார். தி.மு.க., முதல் பெண் மேயர் தாக்கல் செய்யும் பட்ஜெட் என்பதால், புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.

மொத்த வரவினம் ரூ.2,317.97 கோடி; மொத்த செலவினம் ரூ.2,337.28 கோடி; பற்றாக்குறை ரூ.19.31 கோடி என உத்தேச வரவு – செலவு அறிக்கையை தாக்கல் செய்தார்.கடந்த காலங்களில், தனி அலுவலராக பதவி வகித்த கமிஷனர்கள் விஜய கார்த்திகேயன், ஷ்ரவன்குமார், குமாரவேல் பாண்டியன் ஆகியோர், தாக்கல் செய்த பட்ஜெட்டில், உபரி கணக்கு காண்பித்திருந்தனர். இப்போது, பற்றாக்குறை கணக்கு காட்டப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.