26 பதக்கங்கள் பெற்ற பனியன் தொழிலாளி மகன்!!
சென்னை : திருநெல்வேலி கால்நடை மருத்துவ கல்லுாரியில் பி.வி.எஸ்சி., பட்டம் படித்து பல்கலை அளவில் முதலிடம் பிடித்த மாணவர் சங்கர் 26 பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.
சங்கரின் தந்தை ராமசாமியும், தாயார் புஷ்பராணியும், திருப்பூர் பனியன் கம்பெனி தொழிலாளர்கள்.தற்போது கேரளாவில், எம்.வி.எஸ்சி., படித்து வரும் சங்கர் கூறியதாவது: என் தந்தை, தாய் இருவரும் தங்கள் உழைப்பு முழுதையும் என் படிப்புக்காக செலவிட்டனர். 26 பதக்கங்கள் பெற்றது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நாளுக்காக தான் காத்திருந்தேன்.
எம்.பி.பி.எஸ்., படிப்பில் இடம் கிடைக்காததால், கால்நடை மருத்துவ படிப்பை தேர்வு செய்தேன். புற்றுநோய்க்கான மருந்து கண்டுபிடிக்க, ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்பதே என் லட்சியம்.இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.