ஏப்., 6 முதல் மே 10 வரை தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீது விவாதம்!!
சென்னை: தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம், ஏப்.,6 ல் துவங்கி மே 10 வரை நடைபெற உள்ளது.
சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் ஏப்., 6ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவு செய்வதற்காக அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மே 10ம் தேதி வரை கூட்டத்தொடர் நடக்க உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.