தெற்கு ரெயில்வே அறிவிப்பு!
பண்டிகை காலத்தை முன்னிட்டு மேலும் 6 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பண்டிகையை முன்னிட்டு 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தற்போது பண்டிகை காலம் என்பதால் மக்கள் வெளியூர்களில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். இதனால் நெருக்கடியை குறைப்பதற்காக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி ஈரோடு – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்கள் ஜனவரி 10 முதல்.
விழுப்புரம்- திருப்பதி, திருச்சி – பாலக்காடு சிறப்பு ரயில்கள் ஜனவரி 6 முதல்.
திருவனந்தபுரம் – ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் ஜனவரி 9 முதல்.
எர்ணாகுளம் – கே.எஸ்.ஆர் பெங்களூர் ரயில் ஜனவரி 9 முதல் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.