மக்காச்சோளம் விலை எப்படி இருக்கும்? வேளாண் பல்கலை கணிப்பு!!

கோவை: தரமான மக்காச்சோளத்தின் பண்னை விலை, 2022 மார்ச் முதல் மே வரை குவிண்டாலுக்கு, 2300 முதல் 2,400 ரூபாயாக இருக்கும் என, வேளாண் பல்கலை ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், கர்நாடகா, பீகார், தெலுங்கானா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் மக்காச்சோளம் அதிகளவில் பயிரிடப்படுகிறது. மியான்மர், நேபாளம், வங்கதேசம், பூட்டான், ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உக்ரைன்-ரஷ்யா போர் நெருக்கடி காரணமாக, வியட்நாம் மற்றும் மலேசியாவிற்கு இந்திய மக்காச்சோளத்திற்கான ஏற்றுமதி தேவை அதிகரித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.