விவசாயிகள் சங்க தலைவருக்கு மிரட்டல்!!
முசாபர்நகர் :விவசாயிகள் சங்க தலைவருக்கு வந்துள்ள கொலை மிரட்டல் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உத்தர பிரதேசத்தில் இங்கு, முசாபர் நகர் போலீசில், பாரதிய கிஷான் யூனியனின் தலைவர் ராகேஷ் திகாயத்தின் கார் டிரைவர் பெர்ஜ்வல் தியாகி கொடுத்த புகாரில், ராகேஷுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீசார் விசாரிப்பதாக, முசாபர் நகர் மாவட்ட எஸ்.பி., அபிஷேக் யாதவ் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், தனிப்படை போலீசார், பாரதிய கிஷான் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினார்.மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, டில்லியில் ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் நடத்திய போராட்டத்துக்கு ராகேஷ் திகாயத் தலைமை வகித்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.