மதுரை டூ காசி; சிறப்பு சுற்றுலா ரயில்: முன்பதிவு செய்ய அழைப்பு!!!
பொள்ளாச்சி: மதுரையில் இருந்து காசிக்கு இயக்கப்பட உள்ள கோடைக்கால சிறப்பு சுற்றுலா ரயிலில் பயணிக்க, முன்பதிவு செய்து கொள்ளலாம், என, தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், மதுரையில் இருந்து திருச்சி, கரூர், ஈரோடு, சேலம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்கள் வழியாக, காசி மாநகரத்திற்கு சுற்றுலா ரயில் இயக்க உள்ளது. இந்த சுற்றுலா ரயில், வரும் ஏப்., 28ம் தேதி அதிகாலை மதுரையில் இருந்து புறப்படுகிறது.
இப்பயணத்தில், தமிழ் புத்தாண்டில் முதன் முதலாக வரும் அமாவாசை அன்று, கயாவில் முன்னோர்களுக்கு சிறப்பு தர்ப்பணம் செய்யலாம். காசியில் கங்கா ஸ்நானம் செய்து விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி தெய்வங்களையும் தரிசிக்கலாம். அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி, அட்சய திரிதியை அன்று ஹரித்வாரில் கங்கையில் நீராடி, மானச தேவியை தரிசிக்கலாம்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.