ஒடிசா கடற்கரையில் 2.45 லட்சம் ஆமைகள்!!

கேந்திரபரா- ஒடிசாவின் காஹிர்மாதா கடற்கரையில் லட்சக்கணக்கான ‘ஆலிவ் ரிட்லி’ வகை ஆமைகள் முட்டை போடுவதற்காக கரை பகுதியில் குவிந்தன.

அரிய வகை இனமான, ‘ஆலிவ் ரிட்லி’ ஆமைகள் ஒடிசாவின் கடற்கரை பகுதியில் ஆண்டுதோறும் மார்ச் மாதங்களில் முட்டையிட வருகை தருவது வழக்கம். கடற்கரையில் முட்டையிட்டு விட்டு இந்த ஆமைகள் மீண்டும் கடலுக்குள் சென்றுவிடுகின்றன. கடந்த ஆண்டு மார்ச் 9 – 23 வரையிலான காலகட்டத்தில் 3.50 லட்சம் ஆலிவ் ரிட்லி வகை ஆமைகள் ஒடிசா கடற்கரையில் முட்டையிட்டன.

இந்த ஆண்டுக்கான முட்டையிடும் பருவம் சற்று தாமதமான நிலையில், கடந்த 25ம் தேதி மட்டும் ஒரே நாளில் 2.45 லட்சம் பெண் ஆமைகள் ஒடிசாவின் காஹிர்மாதா கடற்கரை பகுதியில் குவிந்தன. இந்த முட்டைகளை, நரி, நாய் போன்ற இதர விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க 24 மணி நேர கண்காணிப்பு பணியை வனத்துறையினர் செய்து வருகின்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.