ஆன்மிக தலைநகர் தமிழகம்: கவர்னர் பெருமிதம்!!

நாகர்கோவில் -”இந்தியாவின் ஆன்மிக தலைநகராக தமிழகம் விளங்குகிறது,” என கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் துாக்க திருவிழா கொடியேற்று விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

அவர் மேலும் பேசியதாவது:செப்புமொழி பதினெட்டுடையாள், சிந்தனையில் ஒன்றுடையாள் என்பது போன்று இந்திய மக்கள் ஒரே சிந்தனை கொண்டவர்களாக காலம் காலமாக பத்ரகாளியை வழிபடுகின்றனர். சுதந்திரத்துக்கு பிறகும் நமது நாடு பல பகுதிகளாக பிரிந்து கிடக்கிறது. பல மாநிலங்கள் வளர்ந்துள்ளன. சில மாநிலங்கள் பின்தங்கியுள்ளன.

அதில் நிறைய ஏழைகள் உள்ளனர். இந்தியா வளர்ந்த நாடமாக மாற வேண்டும் எனில் வடக்குக்கும் தெற்குக்கும் உள்ள வேறுபாடுகள் களையப்பட வேண்டும். அனைவருக்கும் கவுரமான வாழ்க்கை கிடைக்க வேண்டும். எல்லோருக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும். சமூக நல்லிணக்கம் பாதுகாக்கப்பட்டால் நாடு மேலும் வளரும், என்றார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.