இரவு நேர சைக்கிள் ரோந்து; பெண் ஐ.பி.எஸ்., ரம்யா பாரதிக்கு பாராட்டு!!

சென்னை: பெண் போலீஸ் அதிகாரி ரம்யா பாரதியின் பணியை முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனராக இருப்பவர் ஐ.பி.எஸ். அதிகாரி ரம்யா பாரதி. இவர் தன் சைக்கிளில் சென்னையின் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டார். இதை பாராட்டி முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில் ‘பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை குறைக்கவும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டு உள்ளேன். தமிழக போலீஸ் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதில் இரும்புக்கரம் கொண்டு செயல்படும்’ என முதல்வர் கூறியுள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.