வாலாஜாபாத் சாலை போக்குவரத்து நெரிசல் பற்றிய விவரம்!!

செங்கல்பட்டு மாவட்டம் வாலாஜாபாத் சாலை மண்ணிவாக்கம் ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட மண்ணிவாக்கம் கூட்ரோட்டில் மக்கள் தொகை அதிகரிப்பின் காரணமாக வாகன ஓட்டிகள் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் காலை மற்றும் மாலை வேளைகளில் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் குழந்தைகள் முதியோர்கள் கர்ப்பிணி தாய்மார்கள் சாலையைக் கடப்பதற்கு வெகு நேரம் காத்திருந்து பிறருடைய உதவியோடு சாலையை கடக்க வேண்டியுள்ளது.

ஏற்கனவே இருந்த சிக்னல் ஒரு வாகன விபத்தில் முழுமையாக அகற்றப்பட்டு விட்டது. இந்த பகுதியில் அதிகப்படியான சாலை விபத்துக்கள் நடந்துள்ளது இதனை ஊர் பொதுமக்கள் காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் கோரிக்கை மனுவாக கொடுத்துள்ளார்கள். ஆனால் இதுநாள் வரையில் அந்த இடத்தில் அகற்றப்பட்ட சிக்னல் போஸ்ட் இன்னும் நிறுவப்படவில்லை இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் ஆகையால் காவல்துறை உயரதிகாரிகளும் நெடுஞ்சாலை போக்குவரத்து துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு இந்த இடத்தில் போதுமான பாதுகாப்பு வசதிகளை சிக்னல் போஸ்ட் துரித நடவடிக்கை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். மக்கள் நலனில் அக்கறை உள்ள தமிழக அரசும் நெடுஞ்சாலைத் துறையில் விரைவில் ஆவன செய்யுமா. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா. பொதுமக்களுடைய கோரிக்கை விரைவில் நடைமுறைக்கு வருமா என்பது மண்ணிவாக்கம் ஊராட்சி மன்றத்தில் உட்பட்ட பொது மக்களுடைய அன்பார்ந்த வேண்டுகோள். தமிழக அரசுக்கும் அதிகாரிகளுக்கும்.

செய்தி
லயன் வெங்கடேசன் தலைவர்
செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு ஜேர்ணலிஸ்ட் யூனியன்

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி லயன் வெங்கடேசன்.