கடவுளின் பெயரால் பொது இடத்தை ஆக்கிரமிப்பதா?; ஐகோர்ட் கண்டிப்பு!!

சென்னை: கடவுளின் பெயரால் பொது இடத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டி நீதிமன்றத்தின் கண்களை மறைக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்ததுடன், அடுத்த 2 மாதங்களில் ஆக்கிரமிப்பை அகற்றி உத்தரவிட்டது.

நாமக்கல்லில் சாலையை ஆக்கிரமித்து மாரியம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளதாக பாப்பாயி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தெரிவித்ததாவது: பொது இடத்தை ஆக்கிரமித்து புதிய கோவில்களை கட்டும்படி எந்த கடவுளும் கேட்பதில்லை. கடவுளின் பெயரால் பொது இடத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டி நீதிமன்றத்தின் கண்களை மறைக்க முடியாது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.