வரும் 28, 29 ம் தேதிகளில் பணிக்கு வராத தமிழக அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை!!!

சென்னை: வரும் 28, 29 தேதிகளில் பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது என தலைமை செயலர் இறையன்பு கூறியுள்ளார்.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, தொழிலாளர் சட்டத்தொகுப்புகளை கைவிடுவது உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும், 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் வரும் 28 , 29 தேதிகளில் மத்திய அரசு ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு தி.மு.க., இடதுசாரி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. அன்றைய தினம் போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல், மின்சார வாரியமும், சம்பளம் வழங்கப்பட மாட்டாது என எச்சரிக்கை விடுத்தது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.