ஏப்.,6 ல் மீண்டும் கூடுகிறது தமிழக சட்டசபை!!

சென்னை: மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு தமிழக சட்டசபை மீண்டும் ஏப்.,6 ம் தேதி கூடுகிறது.
இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு தமிழக சட்டசபை மீண்டும் ஏப்.,6 ம் தேதி கூடுகிறது. அலுவல் உரிமைக்குழு வரும் 30ம் தேதி கூட உள்ளது. அப்போது, எந்தெந்த நாட்களில் எந்தெந்த துறை மீது விவாதம் நடத்தலாம் என முடிவு செய்யப்படும். சட்டசபையில் கேள்வி நேரம் எப்போதும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.