ஒட்டன்சத்திரம் அருகே நில அதிர்வா?!!
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே கே. கீரனூர் கிராமத்தில் இன்று(மார்ச் 25) அதிகாலை 2.40 மணி முதல் வெடிச்சத்தம் தொடர்ந்து கேட்டுள்ளது. வீட்டில் இருந்த ஓடுகள் சுற்றுசுவர் இடிந்து விட்டதாக கூறி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே நின்று கொண்டு உள்ளனர். பழநி ஆர்டிஓ சிவகுமார் நேரில் சென்று விசாரணை. இது நில அதிர்வாக இருக்கலாம் என்ற அச்சத்துடன் பொதுமக்கள் இன்னும் வீட்டிற்குள் செல்லாமல் வெளியே நின்று கொண்டு உள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.