‘ஹஜ்’ பயணம் எப்போது?!!1
புதுடில்லி: லோக்சபாவில் கேள்வி நேரத்தின்போது, மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது: கொரோனா பரவல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, மேற்காசிய நாடான சவுதி அரேபியாவுக்கு முஸ்லிம்கள் மேற்கொள்ளும் ‘ஹஜ்’ எனப்படும் புனிதப் பயணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த ஆண்டுக்கான ஹஜ் பயணத்தை அனுமதிப்பது பற்றி, சவுதி அரேபியா எந்த முடிவையும் எடுக்கவில்லை. இருப்பினும், நம் நாட்டில், 10 இடங்களில் புனிதப் பயணத்துக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.