மே.வங்கத்தில் 8 பேரை எரித்து கொன்ற விவகாரம்; வழக்கை சிபிஐ.,க்கு மாற்றி உத்தரவு!
கோல்கட்டா: மேற்குவங்கத்தில் 8 பேரை ஒரு கும்பல் தீ வைத்து எரித்து கொன்ற வழக்கை சிபிஐ.,க்கு மாற்றி கோல்கட்டா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேற்குவங்க மாநிலத்தின் பிர்பும் மாவட்டத்தில் உள்ள பர்ஷல் கிராம பஞ்., துணைத் தலைவராக இருந்த திரிணமுல் காங்., கட்சியின் பாதுஷேக், 23ம் தேதி வெட்டிக் கொல்லப்பட்டார். இதையடுத்து, பர்ஷல் கிராமத்துக்கு அருகில் உள்ள போக்டுய் கிராமத்துக்கு, அன்று மாலையில் வந்த ஒரு கும்பல், அங்குள்ள வீடுகளுக்கு தீ வைத்தது. இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.