22 மாவட்டங்களில் கொரோனா பூஜ்ஜியம்!
சென்னை: தமிழகத்தில், கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், 22 மாவட்டங்களில் பூஜ்ஜிய நிலையை அடைந்துள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பு:மாநிலத்தில் நேற்று 32 ஆயிரம் பேரிடம் பரிசோதனை நடத்தியதில், சென்னையில் 13 பேர் உட்பட 41 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து 15 மாவட்டங்களில் தலா ஓரிருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், 22 மாவட்டங்களில் கொரோனா பதிவாகாமல் பூஜ்ஜிய நிலையை அடைந்துள்ளது. சிகிச்சை பெற்றவர்களில் 71 பேர், நேற்று குணமடைந்தனர். தற்போது மருத்துவமனைகளில் 95 பேர் உட்பட 475 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்றால் நேற்றும் உயிரிழப்பு இல்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.