ஏமாற்று வேலையை அரசு செய்தால் தவறில்லை: அண்ணாமலை காட்டம்!!!
சென்னை: ‘ஆசை காட்டி ஏமாற்றும் வேலையை அரசு செய்தால் தப்பில்லை’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: சட்டசபையில், 110வது விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஒரு அறிக்கை படித்துள்ளார். அதில், ‘தி.மு.க., கொடுத்த வாக்குறுதிகள் குறித்தும், அவற்றை நிறைவேற்றுவது குறித்தும், எதிர்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர். இந்த அரசு ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள்தான் ஆகிறது. 10 மாத குழந்தையிடம் 10ம் வகுப்பு மதிப்பெண் என்ன என்று கேட்பது போல இருக்கிறது அவர்களின் கேள்விகள்’ என்று, நகைச்சுவை உணர்வுடன், ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.