நாடு முழுதும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வரும் கோவிட் கட்டுப்பாடுகள்!!

கோவிட் கட்டுப்பாடுகள் தொடர்பாக, கடந்த பிப்ரவரி 25ம் தேதி வெளியிட்ட அறிக்கையின்படி, அந்த கால அவகாசம் நிறைவடைந்த பிறகு, கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்படாது. ஆனால், கட்டுப்பாடுகள் தேவையில்லை என்றாலும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தப்படுத்துவது போன்றவற்றை சமூக பொறுப்புடன் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், நாட்டில் கோவிட் கட்டுப்பாடுகள் வரும் 31ம் தேதிக்குள் முடிவுக்கு கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 ஆண்டுகளுக்கு பிறகு கோவிட் கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.