உக்ரைனில் உடனடி போர் நிறுத்தம்: மோடி, ஆஸி., பிரதமர் வலியுறுத்தல்!
புதுடில்லி : ‘கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும்’ என, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா உச்சி மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடந்த இக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் பங்கேற்றனர்.இதில் விவாதிக்கப்பட்டது தொடர்பான கூட்டறிக்கையை, நம் வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.