இயற்கை….
இயற்கையை நேசிக்கும் இனிய மனதை இறைவரிடம் கேட்டேன்! இயற்கையில் அத்துணை மகத்துவம் உளதா என் கேட்டான்….. மனித குலம் மாத்திரம் அல்ல……. அஃறிணை உயிர்களும் உயிர்வாழ இயற்கையே ஆதாரம் என்றுரைத்தேன்…. மரமும் செடியும் கொடியும் கூட உயிர்வாழ இயற்கை மழையும் தூயகாற்றா வெங்கதிரோன் ஒளியுமே காரணம் என்பேன்…. விண்ணின்று பெய்யும் மழையும் மலைமுகட்டிலிருந்து விழும் அருவியும் தவழ்ந்தோடும் நதியும் தேங்கிய குளம் குட்டைகளும் என் விவசாயிகளின் நெஞ்சுர உழைப்பும் என் தாய்த்திருநாட்டை உயர்த்தும் என்பதில் ஐயமில்லை…. இயகையைப் போற்றி விவசாயம் காப்போம். இப்படிக்கு ஓர் ஏழை விவசாயி.
நன்றி, தமிழ் பிரகலாதன்.