உக்ரைன் போரில் 10 ஆயிரம் ரஷிய வீரர்கள் பலி!!
உக்ரைன் மீதான ரஷிய படைகளின் போா் இன்று 27-வது நாளை எட்டி உள்ளது . தலைநகா் கீவில் ஒரு வணிக வளாகம் மீது ரஷிய படைகள் குண்டுவீசி தாக்கியதில் பொதுமக்கள் 8 போ் கொல்லப்பட்டனா்.
அஸோவ் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள மரியுபோல் நகா்தான் ரஷியாவின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. மூன்று வாரங்களுக்கு மேலாக முற்றுகையிட்டுள்ள ரஷிய படைகள், அந்த நகரைக் கைப்பற்ற தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா். அந்த நகரிலிருந்து பொதுமக்களை வெளியேற்ற உக்ரைன் அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டபோதும் ரஷியாவின் தாக்குதலால் அது வெற்றி பெறவில்லை.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.