இதய நோய் உள்ளவர்கள், வாரத்தில் 5 நாள்கள் பாதாம் எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் 50 சதவிகிதமாகக் குறையுமாம். ‘அதெப்படி? பாதிக்கும் மேல் கொழுப்பு உள்ளது என்கிறார்கள்… இதயத்துக்கும் நல்லது என்கிறார்கள்?’ என்பதுதானே உங்கள் சந்தேகம்? ஏற்கனவே சொன்ன மாதிரி அதிலுள்ள நல்ல கொழுப்புதான் காரணம். எடை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், வாரத்தில் 2 முறை ஐந்தைந்து பாதாம் எடுத்துக் கொண்டால், அது எடைக் குறைப்புக்கு 31 சதவிகிதம் உதவுமாம்.

இன்னும் சொல்லப் போனால், பாதாம் எடுக்காதவர்களைவிட, பாதாம் எடுப்பவர்கள் ஒல்லியாகவே இருப்பார்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஏறாமல் தவிர்க்கவும் பாதாம் உதவுகிறது.

சாப்பாட்டுக்குப் பிறகு ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிப்பதைத் தவிர்ப்பதால் நீரிழிவுக்காரர்கள், எடைக் குறைக்க நினைப்பவர்கள், இதய நோயாளிகள் என எல்லோருக்கும் ஏற்றதாக இருக்கிறது பாதாம்.

செய்தி வினோத் திருவள்ளூர்

About The Author