ஒரு நாயை மற்றொரு நாய் காப்பற்றியுள்ளது..
ஆபத்தில் இருந்த ஒரு நாயை மற்றொரு நாய் காப்பற்றியுள்ளது நெட்டிசன்கள் பாராட்டுகளை பெற்றுள்ளது.
அர்ஜெண்டினாவில் உள்ள ஜூலியட்டா என்பவர் தன்னுடைய வீட்டில் இரண்டு நாய்களை வளர்த்து வந்துள்ளார். அந்த நாய்கள் பிட்புல் ரக நாய் ஆகும். இதில் ஒன்றுக்கு லூனா என்று பெயர் வைத்துள்ளார். இதேபோல மற்றொரு நாய்க்கும் ஹைபிரின்ஹா என்று பெயர் வைத்து வளர்த்து வந்துள்ளார். ஆனால் லூனா பார்வை திறன் பாதிக்கப்பட்டு கண் தெரியாமல் இருந்துள்ளது. இருப்பினும் இரு நாய்களையும் ஜூலியட்டா கண்ணும் கருத்துமாக பார்த்து வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கண் தெரியாத லூனா நாய் நீச்சல் குளத்தில் தவறி விழுந்துள்ளது.
அப்போது அதன் பக்கத்தில் இருந்த மற்றொரு நாயனான ஹைபிரின்ஹா பதற்றத்தில் அங்குமிங்கும் ஓடி உள்ளது. இதையடுத்து லூனா நாயை காப்பாற்ற போராடிய அந்த ஹைபிரின்ஹா என்ன செய்வதென்று தெரியாமல் லூனாவின் கழுத்தை கவ்வி பிடித்து வெளியில் இழுத்து கரையேற்றியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. ஆபத்தில் உதவிய அந்த வாயில்லா ஜீவனுக்கு நெட்டிசன்கள் தன்னுடைய பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
செய்தி ரபி திருச்சி